சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவு: உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று!
அறிவியல் மற்றும் தொழில் நுட்பமானது விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ச்சியடைந்திருந்தாலும், இயற்கையின் நியதியை தகர்த்தெறியும் ஒவ்வொரு விநாடியும் மனித குலத்துக்கு அழிவு நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பதே மெய்.
இயற்கையில் எண்ணிலடங்கா விந்தைகள் ஒழிந்திருக்கின்றது. இயற்கையின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் உணவுச் சங்கிலியில், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில், சிட்டுக்குருவிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிட்டுக்குருவிகளின் அழிவை தடுக்க ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் திகதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டுமுதல் இந்த நாள் கடைபிடிக்கப்படுகின்றது.
இந்த நாளில் சிட்டுக்குருவிகள் மட்டுமல்லாமல் அழகிய சிறு சிறு பறவைகளை கொண்டாடவும், அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறுநிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது ஏன் முக்கியத்துவம் பெருகின்றது? சிட்டுக்குருவிகளின் அழிவை தடுக்க ஆண்டுதோறும் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுவதன் பின்னணி என்ன என்பது தொடர்பில் முழுமையான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |