அதிர்ஷ்ட எண் 7இல் பிறந்தவரா நீங்கள்...
தாங்கள் எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்துவிடக் கூடிய 7ஆம் எண்காரர்கள் ஆன்மிக நாட்டம் அதிக உள்ளவர்களாக இருப்பார்கள். கடமையில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
தனிமையை அதிகமாக விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள். எந்த செயலை தொடங்கினாலும் அதை நிறைவேற்ற பல தடைகளை சந்திக்க வேண்டும். தன் மனதிலுள்ள மறைக்கும் குணம் கொண்டவர்கள்.
image - Tiny Rituals
இவர் தர்மத்துக்காகவும் நீதிக்காகவும் போராடும் குணம் கொண்டவர்கள். எதிலும் நேர்மையாக செயல்படுவார்கள். மாறுபட்ட சிந்தனைகள் கொண்டவர்கள்.
இவர்களிடம் மனோசக்தி அதிகமாக இருக்கின்றது. எளிதில் எந்தக் காரணமும் இல்லாமல் மனக்குழப்பம் அடைவார்கள். தனக்கென சில விதிகளை விதித்துக்கொண்டு அதன்படி வாழ விரும்புவார்கள்.
image - Yummy tummy kitchen
தொழில்
சமையல் கலை, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது, கடிகாரக் கடை, மருந்துக்கடை போன்ற தொழில்கள். அதுமட்டுமில்லாமல் சங்கீதம், நாட்டியம், சிற்பம் போன்ற தொழில்களிலும் பிராணிகளை பிடிக்கும் தொழில், விஷம் சம்பந்தமான பொருட்கள் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபடலாம்.
குடும்பம்
சகோதர்கள் உதவி செய்வார்கள். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
image - Mindeasy
திருமணம்
இவர்களின் திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் திருமணமும் தாமதமாகத்தான் நடக்கும்.
கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனினும் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
அதிர்ஷ்ட நிறம்
நீலம், பச்சை, வெள்ளை, இலேசான மஞ்சள் என்பவை சிறந்தவையாக இருக்கும். கருப்பு மற்றும் கரும் சிவப்பு நிறங்கள் தவிர்க்கட வேண்டியவை.
image - Wallpaper access