வரிசைக் கட்டிக்கொண்டு செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லும் மக்கள்! எங்கு செல்கிறார்கள் தெரியுமா? வைரலாகும் வீடியோ
ஸ்பெயின் நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் வரிசையாக தங்களது செல்லப்பிராணிகளை அழைத்துக்கொண்டு செல்லும் சம்பவம் தற்போது படம் வைரலாகி வருகின்றது.
வரிசையில் செல்லப்பிராணிகள்
புனித அந்தோனியார் தினத்தை முன்னிட்டு, ஸ்பெயினில் பாதிரியார்களிடம் ஆசிர்வாதம் பெறும் செல்லப் பிராணிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வு கடந்த மாதம் ஜனவரி மாதம் 17திகதி அன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள தேவாலயங்களில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு அருள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் புனித அந்தோனியரால் தங்களது செல்லப் பிராணிகள் ஆசிர்வதிக்கப்படுவதாகவும், இதனால் எந்த நோய் நொடியும் தாக்காமல் தங்களது செல்லப்பிராணிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அந்நாட்டு மக்களால் நம்பப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், பூனை, நாய், ஆமை, வெள்ளெலிகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை அதன் உரிமையாளர்கள் தேவாலயத்துக்கு அழைத்து வந்து ஆசிர்வாதம் பெற்றனர். பாதிரியார்கள் புனித நீர் தெளித்து செல்லப் பிராணிகளை ஆசிர்வதிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி உள்ளது.
VIDEO: Pets receive special blessings in Spain.
— M.E.N ⍟ (@ModernEraNews) January 18, 2023
Dogs, cats, turtles, and even ferrets are being blessed in Madrid by a priest on the day of Saint Anthony, the patron saint of animals pic.twitter.com/4LeuRh8PH3