1 ஆம் திகதி பிறந்தவரா நீங்கள்? யாரையும் நம்ப மாட்டீர்களாமே....
எண்களில் முதன்மையானதும் தனித்வமானதும் முதலாம் எண் என்று கூறலாம்.
எல்லா எண்களுக்குமே தனித்தன்மை இருக்கின்றது என்றாலும் இது முதல் எண் என்பதால் சற்று ஸ்பெஷல் தான். சரி இனி 1 ஆம் திகதி பிறந்த எண்காரர்களின் பலன்களைக் காண்போம்...
எதையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்தும் செல்லும் 1ஆம் எண்காரர்கள், சுறுசுறுப்பானவர்களும் பெருந்தன்மை நிறைந்தவர்களுமாக இருப்பார்கள்.
யாருக்கேனும் வாக்கு கொடுத்துவிட்டால் அதை உடனே நிறைவேற்றி விடுவார்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பர். மற்றவர்களை கடுமையாக வேலை வாங்கக் கூடியவர்கள். கள்ளம், பொய் என்று இவர்களிடம் எதுவும் கிடையாது.
எதையும் நேர்மையாக அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களது உடைமைகள் மீது ஒருபோதும் ஆசை வைக்க மாட்டார்கள்.
எதிரியைக்கூட நண்பராக்கிக் கொள்வார்கள். மற்றவர்கள் இவர்களை அலட்சியம் செய்வதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தனது நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.
திகதி வாரியாக பலன்கள்
01 ஆம் திகதி - இவர்களிடம் தன்னம்பிக்கை அதிகம். தாம் விரும்பியபடியே நடப்பார்கள். பெரிதாக மற்றவர்களை அனுசரித்து போக மாட்டார்கள்.
10 ஆம் திகதி - நிதானத்தோடு செயல்படுவார்கள். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். மற்றவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.
19 ஆம் திகதி - அன்பால் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். பிடிவாதம் சற்று அதிகம். வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
28 ஆம் திகதி - பண விடயங்களில் ஏமாறாமல் பார்த்துக் கொள்ளவும். பொருளாதாரத்தில் ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். மென்மைத் தன்மை இவர்களிடம் உண்டு.
குடும்பம்
தாய்,தந்தையின் மீது அதிக மரியாதையும் கணவன், மனைவி, பிள்ளைகள் மீது அதிக பாசமும் கொண்டவர்கள்.
தொழில்
விஞ்ஞானம், மருத்துவம்,பொறியியல், இரசாயனம் போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றதாகும். அதுமட்டுமில்லாமல் பறவைகள், பிராணிகள் வளர்ப்பு, பழவகைகள், தங்கம் சம்பந்தப்பட்ட தொழில்கள் சிறப்பானதாக அமையும்.
அதிர்ஷ்ட நாட்கள்
1,10,19,28 ஆகிய தினங்கள் அதிர்ஷ்டமானவை.
அதிர்ஷ்ட நிறங்கள்
இளம் சிவப்பு, நீலம், மஞ்சள், பொன்னிற உடைகள் என்பன நன்மையளிக்கும்.
கருப்பு, கபிலம் போன்ற நிறங்களை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
திருமணம்
வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமையாக வாழ்வார்கள். தனக்கான துணை அழகாகவும் புத்திசாலியாகவும் இருக்க வேண்டுமென விரும்புவர். இவர்களது கோணல் புத்தியையும் பிடிவாத குணத்தையும் கட்டுப்படுத்தினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.