68 ரன்னில் சுருண்ட பெங்களூர் அணி - அபார வெற்றியை பறித்த ஹைதராபாத்!
ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி களமிறங்கிய பெங்களூர் அணி, டு பிளெசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலி, அவருடன் மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையை கட்டினர்.
68 ரன்களில் ஆல் அவுட்
இதையடுத்து, இவர்களின் விக்கெட்டை இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் வீழ்த்த, தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகளை விரட்டி 12 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் பவர்பிளே முடிவில் பெங்களுரு அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வந்தது. அதன்பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆக, 68 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது.
அடித்து நொறுக்கிய ஹைதராபாத்
இதனால் ஐதராபாத் அணிக்கு 69 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணி, தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 20 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பவுண்டரிகளை ஓட விட்ட 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் கேன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்தார். ராகுல் திரிபாதி சிக்ஸர் அடித்து மேட்சை முடிக்க ஐதராபாத் பெங்களூரூ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
விராட்கோலி சொதப்பல்
இதன் மூலம் ஹைதராபாத் அணி 5வது வெற்றியை ருசித்து அந்த அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் 8வது முறை 100 ரன்களுக்கு கீழ் சுருண்ட பெங்களூரு அணி 3 தோல்வி, 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது.
மேலும், தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலியை ரசிகர்கள் ஒரு பக்கம் மீண்டும் வர வேண்டும் எனவும், பலரும் விமர்ச்சிக்க தொடங்கியுள்ளனர்.
இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் ரோகித், விராட் கோலி இருப்பார்கள் என கருதப்பட்ட நிலையில், இவர்கள் இப்படி சொற்ப ரன்னில் அவுட் ஆகி வருவது இந்திய அணி பின்னடைவாக உள்ளது. இவர்களை போலவே பும்ராவும் விக்கெட் எடுக்க திணறி வருகிறார்.
Currently placed at the 2nd spot, and #ReadyToRise further in this #Epic #TATAIPL!
— Star Sports (@StarSportsIndia) April 23, 2022
How many ?? for @SunRisers' win tonight in #RCBvSRH?#IPL2022 #YehAbNormalHai #OrangeArmy #SRHpic.twitter.com/DBKBW7ShhD
