Ethirneechal: ஈஸ்வரி குறித்து மருத்துவர் கூறிய உண்மை... தந்தைக்கு எதிராக கிளம்பிய தர்ஷன், தர்ஷினி
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்த உண்மையை மருத்துவர் வெளியிட்டுள்ளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரனிடம் ஈஸ்வரி பேசிய நிலையில், குணசேகரன் கோபத்தில் அவரை அடித்து மண்டையை உடைத்துள்ளார்.
பின்பு ஒன்றும் தெரியாதது போன்று தனது அறைக்குள் சென்றுள்ள நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஈஸ்வரியை மருத்துவமனையில் நந்தினி மற்றும் பிள்ளைகள் அனுமதித்துள்ளனர்.
மருத்துவர் தற்போது ஈஸ்வரி குறித்த உண்மையை கூறியுள்ளார். அதாவது கழுத்து நெறித்து சுவற்றில் மண்டையை கொண்டு இடித்ததாக ரிப்போட்டில் உள்ளது என்பதை கூறினார்.
ஏற்கனவே தர்ஷினிக்கு இந்த சந்தேகம் இருந்த நிலையில், தற்போது தந்தைக்கு எதிராக தர்ஷினி, தர்ஷன் இருவரும் போலிசாருடன் சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த பார்வையாளர்கள் ஈஸ்வரியின் கதையை சீரியலில் முடிக்க போகின்றார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
