ரக்ஷா பந்தன் 2025: எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம்? பரிகாரம் இதுதான்!
உடன்பிறப்புகளுக்கு இடையில் காணப்படும் அன்பு மற்றும் பாதுகாப்பின் பிணைப்பைக் கொண்டாடும் ஒரு புனிதமான பண்டிகையான ரக்ஷா பந்தன், இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு, கிரக நிலைகள் வழக்கத்திற்கு மாறாக தீவிரமாக இருப்பதால், சில ராசிக்காரர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக ராகு கும்ப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பார்கள், இது கர்ம பாடங்கள், தாமதங்கள் மற்றும் உணர்ச்சி கொந்தளிப்பைத் தூண்டும் நிலை காணப்படுகின்றது
அந்தவகையில், இந்த கிரக சீரமைப்பு சில ராசிக்காரர்களுக்கு உறவுகள், தொழில் அல்லது குடும்ப நல்லிணக்கத்தில் சில பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

எனவே அதனை தவிர்த்து ரக்ஷா பந்தன் சிறப்பான நாளாக அமைய குறிப்பிட்ட சில ராசிகள் செய்யவேண்டிய பரிகாரங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் தேவையற்ற கோபங்கள் தலைத்தூக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.அதனால் குடும்பத்துடனும் உடன் பிறந்தவர்களுடனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு காணப்புடுகின்றது. இது குறித்து இவர்கள் சற்று எச்சரிக்ககையாக இருக்க வேண்டும்.
பரிகாரங்கள்: ரக்ஷா பந்தன் சிறப்பான நாளாக அமைய ஹனுமனுக்கு சிவப்பு நிற பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது நல்ல பலனை கொடுக்கும். மேலும் சகோதர்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ராக்கி கட்டுவது இவர்களின் உறவை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் துணைப்புரியும்.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு ராகுவின் தாக்கத்தால் இந்த நாளில் மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் இருக்கும். இது உங்களை குடும்ப நபர்கள் தவறாக புரிந்துக் கொண்டு செயல் படுவதற்கான நிலையை ஏற்படுத்தும்.
பரிகாரங்கள்: இந்த தினத்தில் 108 முறை ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை பாராயணம் செய்வது சிறப்பு. அத்துடன் நீங்கள் மஞ்சள் நிற ராக்கி கட்டிக்கொள்வது சிக்கலைகளில் இருந்து விடுபட உதவும்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் ஆளுமையை உறவுகளிடம் நிருபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.அதன் விளைவாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.மேலும் ராகுவின் தாக்கம் இவர்களுக்கு தொழில் ரீதியிலும் சில பிரச்சிகைகளை ஏற்படுத்தும்.
பரிகாரங்கள்: ரக்ஷா பந்தன் தினத்தில் காலையில் சூரிய பகவானுக்கு தண்ணீரில் மஞ்சள் கலந்து சமர்ப்பித்து வழிபாடு செய்வது கிரக பாதிப்புகளை சற்று குறைக்கும். இவர்கள் உடன் பிறந்தவர்களுக்கு தங்க நிற ராக்கி கட்டுவது நேர்மறை விளைவுகளை கொடுக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராயில் பிறந்தவர்கள் கிரக நிலைகளின் தாக்கத்தால், கடந்த கால பிரச்சனைகளால் மீண்டும் மீண்டும் மனஅழுத்தத்தை அனுபவிக்க நேரிடும். இதனால் குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பங்களும், நிம்மதியியற்ற நிலையும் காணப்படும்.
பரிகாரங்கள்: இவர்கள் அன்றைய நாளில் தங்கள் சகோதரர்களுக்கு சிவப்பு அல்லது கருப்பு நிற ராக்கி கட்டுவது உறவை வலுவாக்கும். மேலும் சனிபகவானை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |