சிங்கப்பெண்ணே சீரியல் ஆனந்தியா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி
சிங்கப்பெண்ணே சீரியல் புகழ் ஆனந்தி தாமரை பூக்கள் நிறைந்த குளத்திற்கு நடுவில் தேவதை போல் காட்சியளிக்கு அழகிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிங்கப்பெண்ணே சீரியல்
சின்னத்திரையில் தற்போது TRP ரேட்டிங்கில் டாப் 5ல் உள்ள சீரியல் தான் சிங்கப்பெண்ணே. இது சென்னைக்கு ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யச் செல்லும் துணிச்சலான கிராமத்துப் பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.
இந்த சீரியலில் ஹீரோ இரண்டு பேர் இருந்தாலும் ஹீரோயின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.
அப்படி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் மனிஷா, அமல்ஜித், நிவேதா, தர்ஷக் உள்ளிட பலர் நடித்துவருகின்றனர்.
அதன்படி, இந்த சீரியலில் கதாநாயகியாக ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ள நடிகை தான் மனிஷா மகேஷ். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு நாளொன்றுக்கு 12000 சம்பளமாக பெறுகின்றார் என்ற தகவல் அண்மையில் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் மனிஷா மகேஷ் ட்ரெண்டிங் சேலையில் தாமரை மலர்கள் நிறைந்த குளத்தில் இருந்து செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |