63 வயதை எட்டிய நடிகை ராதிகா... ஸ்பெஷல் காணொளி வெளியிட்ட மகள்!
நடிகை ராதிகாவின் மகள் ரேயான் மிதுன் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள ஸ்பெஷல் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராதிகா சரத்குமார்
தென்னிந்திய திரையுலகில் 1980 முதல் 1995-ஆம் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக அறியப்பட்ட நடிகை ராதிகா.
கடந்த 1978 ஆம் ஆண்டு மூத்த இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கிழக்கே போகும் ரயில்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அன்று தொடங்கி இன்று வரை சுமார் 45 ஆண்டுகளாக பல நூறு திரைப்படங்களிலும் பணியாற்றிய இவர் சின்னதிரையிலும் பல ஹிட் தொடர்களில் நடித்துள்ளார்.
1991-ஆம் ஆண்டு பெண் என்ற தொடரில் நடித்து சின்னத்திரையில் கால்பதித்தார். அதனை தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு சித்தி என்னும் மெகாத்தொடர் சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் தற்போது நடிகை ராதிகா தனது 63வது வயதை எட்டியுள்ளார். இவரது பிறந்தநாளில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மகளின் உருக்கமான பதிவு
இந்த நிலையில் நடிகை ராதிகாவின் மகள் ரேயான் மிதுன் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள ஸ்பெஷல் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த பதிவில் ரேயான் குறிப்பிடுகையில், "என்னுடைய துவக்கமும் நீங்கதான், முடிவும் நீங்கதான். நீங்கதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட், என் பலம், என் எல்லாமுமே. உங்க மகளா இருக்குறதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு" என குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |