உடல் எடையை மின்னல் வேகத்தில் கட்டுக்குள் வைக்கும் பப்பாளி கூட்டு...5 நிமிடத்தில் ரெடி
இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பது என்பது நம் அனைவருக்கும் மிகவும் கடினமான ஒரு காரியமாக உள்ளது.
ஆனாலும் எடையை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
உடல் எடை அதிகரிக்கும் போது புதிய புதிய நோய்களும் எம்மை தொற்றி கொள்ளும்.

உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க விரும்புபவர்களும் வாரம் ஒரு முறை பப்பாளிக்காயை கூட்டு அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிடுங்கள்.
எடை கட்டுக்குள் வைக்கும் பப்பாளி கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பப்பாளிக்காய் (சிறியது) - ஒன்று
- தேங்காய் துருவல் - கால் கப்
- பச்சை மிளகாய் - 2
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- பாசிப்பருப்பு - ஒரு கப்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் நைசாக அரைத்து கொள்ளவும்.
பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும்.

அரைத்த தேங்காய் கலவையை வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பப்பாளி கலவையில் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து இறக்கவும்.
இப்போது சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு ரெடி.