வித்தியாசமான சுவையுடன் மாங்காய் ஜுஸ் குடித்ததுண்டா...
மாங்காய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதன் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை அனைவரின் நாவையும் கட்டிப்போட்டு விடும்.
இனி மாங்காய் ஜுஸ் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1
புதினா இலை - சிறிதளவு
சர்க்கரை - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மசாலாத் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
ஐஸ்கட்டி - தேவையான அளவு
image - you tube
செய்முறை
முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகனாக வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் அந்த மாங்காய் துண்டுகளுடன், சர்க்கரை, புதினா, மசாலா, இஞ்சி, ஐஸ்கட்டி என்பவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டப்பட்ட ஜுஸை கண்ணாடி க்ளாஸில் ஊற்றி அதன்மேல் மிளகாய் தூள், புதினா என்பவற்றை தூவி குடிக்கலாம்.