சுவையானதொரு சுட்ட மாங்காய் கறி! வித்தியாசமான சுவையில் நொடியில் என்ன செய்வது?
Mango
Green Chilli
Water
By Independent Writer
மாங்காய் என்றாலே நாங்கள் விரும்பி உண்ணும் பழமாகும். வழக்கமாக நாங்கள் மாங்காயை கறி வைத்து தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் மாங்காயை சுட்டு கறி வைத்து சாப்பிட்டு உள்ளீர்களா?
சுவையானதொரு சுட்ட மாங்காய் கறி எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்!!
தேவையான பொருட்கள்
- 5 அல்லது 6 மாங்காய்கள்
- 1 முழு வெள்ளைப்பூடு
- 2 பச்சை மிளகாய்
- 1 வெங்காயம்
- மஞ்சள் தூள்
-
மிளகாய் தூள்
-
கறுவாப்பட்டை
- ஏலக்காய்
-
உப்பு
- தண்ணீர்
- சீனி
செய்முறை
-
5 அல்லது 6 மாங்காய்களை எடுத்து க்ரில் அடுப்பில் போட்டு சுட்டுக்கொள்ளுங்கள்.
- பின் 1 முழு வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
- பின்பு 2 பச்சை மிளகாயையும் எடுத்து நடுவிலிருந்து நறுக்கிக்கொள்ளுங்கள்.
- பின்பு வெள்ளைப்பூண்டை எடுத்து பொடியாக்கிக்கொள்ளுங்கள்.
- பின்பு சுட்ட மாங்காயை எடுத்து தண்ணீர் ஊற்றி கழுவி தோலினை அகற்றிவிடுங்கள்.
-
ஒரு கடாய் எடுத்து 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 2 மேசைக்கரண்டி மிளகாய் தூளை எடுத்து அடுப்பில் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்.
-
பின் ஏலக்காய் மற்றும் கருவாப்பட்டையை நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள்.
- பின் நறுக்கிய வெள்ளைப்பூடு மற்றும் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்.
- நறுக்கிய மாங்காயையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
- வறுத்த மிளகாய் தூள் மற்றும் வறுத்த மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
- பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
- 1 மேசைக்கரண்டி சீனியும் சேர்த்து பின்பு பிரட்டி எடுத்தால் நாவூற செய்யும் சுட்ட மாங்காய் கறி தயார்!
இந்த சுவையான ஒரு கறி போதும் சாதத்தோடு சாப்பிட. புளிப்பாகவும் சுவையாகவும் இருக்கும் அது. ஆகவே வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள் என்பது உண்டையாக தான் இருக்கும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US