16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ரவீந்தர் சந்திரசேகர் கைது!
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகியுள்ளது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்தர் - மகாலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.
இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.
ரவீந்தர் சந்திரசேகர் பண மோசடி
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடக் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் எனக் கூறி முதலீடு செய்தால், நல்ல லாபம் தருவதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து 16 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து அமெரிக்காவில் இருக்கும் விஜய் என்பவர் புகார் செய்துள்ளார்.
அவர்,“. கடனாக 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரே வாரத்தில் திருப்பித் தருவதாகக் கூறி மோசடி ” செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த வழக்கில் ரவீந்திரரை தற்போது கைது செய்துள்ளார்கள்.
குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், போஸ்ட்டை பார்த்த இணையவாசிகள் ரவீந்தர் மீது பயங்கர எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |