திருமணத்திற்கு முன்பு ரவீந்தருக்கு மகாலட்சுமி போட்ட கண்டிஷன்! அடுத்தடுத்து வெளியாகும் உண்மை
திருமணத்திற்கு முன்பு இயக்குனர் ரவீந்தருக்கு மகாலட்சுமி போட்ட கண்டிஷன் குறித்து வெளியாகியுள்ளது.
ரவீந்தர் மகாலட்சுமி
சில தினங்கள் முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை, லிப்ரா புரொடக்ஷன் தயாரி்ப்பாளர் ரவீந்தர் திருமணம் செய்துள்ளார்.
தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வரும் இவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இருவரும் இணைந்து பல சேனல்களுக்கு நேர்காணல் மூலம் பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
மகாலட்சுமி போட்ட கண்டிஷன்
தன்னை திருமணம் செய்துக் கொள்ள மகாலட்சுமி தனக்குப் போட்ட கண்டிஷன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.
அதாவது, ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான் என்ற காரணத்தால், அப்படியே விட்டு விடக்கூடாது. தனக்கு குழந்தை 100% வேண்டும் எனவும், இதை ஏற்றுக் கொண்டால் திருமணம் செய்துக் கொள்ளலாம் எனவும் ரவீந்தரிடம் சொன்னாராம் மகாலட்சுமி. அவரின் நிபந்தனையை ரவீந்தரும் ஏற்றுக் கொண்டாராம்.
