பண மோசடி புகாரில் சிக்கிய மகாலட்சுமியின் கணவர்! ஆனால் அவர் பதிவிட்டது என்ன தெரியுமா?
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு போஸ்ட்டிற்கு கமண்ட் செய்தவருக்கும் அனைவரும் அதிர்ந்து போகும் படி ஒரு ரிப்ளையை ரவீந்தர் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை பிரபலத்துடன் திருமணம்
கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து பிரபலமாகியவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் “லிப்ரா புரொடக்ஷன் ” என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தை வைத்து நளனும் தமயந்தியும், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இப்படியொரு நிலையில் தன்னுடைய ஆசை மனைவியுடன் சுகுமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வரும் ரவீந்தர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அதற்கு வழமைப்போல் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்ததுடன், சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தார்கள்.
கடன் வாங்கிய ரவீந்தர்
இந்த நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த விஜய் என்பவரிடம் ரூ20 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
அப்போது விஜய் 15 இலட்சம் ரூபாய் பணத்தை ரவீந்தரின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். அடுத்த வாரம் தருவதாக கூறிய ரவீந்தர் இது வரை பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம்.
கடனை திருப்பி கேட்ட விஜயின் செல்போன் நம்பரை பிளாக் செய்து விட்டாராம்.
இதனை தொடர்ந்து பணத்தை கேட்டு விஜய் கிளப் ஹவுஸ் செயலியில் பேசிய போது, ஆபாசமாக வார்த்தைகளால் பேசியுள்ளாராம்.
இதில் கடும் அவமானத்தை சந்தித்த விஜய், ரவீந்தர் பணம் வாங்கியதற்கான ஆதாரங்களை சென்னை கமிஷ்னருக்கு புகார் அளித்தார்.
கூலான ஒரு ரிப்ளை
இது தொடர்பான விசாரணை முடிவில் ரவீந்தர் தரப்பு பணம் தருவதாக ஒப்பு கொண்டது.
இந்த சம்பவத்தை தெரிந்த ஒருவர் ரவீந்தரின் புகைப்படத்திற்கு கீழ் வந்து சம்பவத்தை நினைவுப்படுத்தியுள்ளார்.
இதற்கு சற்று கோபம் இல்லாமல் ரவீந்தர் அன்பைப் பகிர்ந்து, அன்பு இருப்பதை நிரூபிப்போம் எனும் கேப்ஷன் போட்டு கூலா பதில் அளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |