கணவர் ரவீந்தரின் பிறந்தநாளுக்கு மகாலட்சுமி கொடுத்த சர்ப்ரைஸ்... வைரல் காணொளி
தயாரிப்பாளர் ரவீந்தரின் பிறந்தநாளுக்கு மகாலட்சுமி கொடுத்த சர்ப்ரைஸான பரிசு காணொளியாக வெளியிட்டுள்ளார்.
ரவீந்தர் மகாலட்சுமி
தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லித்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ள வைக்கும்.
அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து வரும் இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்துள்ளார்.
பின்பு சக நடிகருடன் தொடர்பு என பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக இந்த ஜோடி வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
கணவருக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்
சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் என்பவரின் பணத்தை வாங்கிவிட்டு மோசடி செய்ததாக கூறப்பட்ட நிலையில், ரசிகர்கள் சரமாரியாக பேசியும் வந்தனர். இந்த பிரச்சினை தற்போது தான் அடங்கியுள்ளது.
இந்நிலையில் ரவீந்தரின் பிறந்தநாளுக்கு மகாலட்சுமி, அவரது மிகப்பெரிய புகைப்படத்தினை ப்ரேம் செய்து கொடுத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |