மாமியார் கொடுமையில் நடிகை மகாலட்சுமி... மௌனம் கலைத்து உண்மையை உடைத்த ரவீந்தர்
நடிகை மகாலட்சுமி குறித்து அவரது கணவர் ரவீந்தர் பல உண்மைகளை கூறியுள்ளது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி
தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லித்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ள வைக்கும்.
அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து வரும் இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்துள்ளார்.
பின்பு சக நடிகருடன் தொடர்பு என பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு பின்பு அதிகமாக பேசப்பட்ட திருமணம் இவர்களது திருமணம் தான். இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக இந்த ஜோடி வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் ரவீந்தர் போட்ட பதிவு, இருவரும் விவாகரத்து வரை சென்றுவிட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு கணவருடன் மகாலட்சுமி புகைப்படம் வெளியிட்டு, அனைவரது வாயையும் அடைத்தார்.
மாமியார் மருமகள் பிரச்சினையா?
தனது மனைவி குறித்து ரவீந்தர் கூறுகையில், படப்பிடிப்பு முடிந்து தாமதமாக வீட்டிற்கு வரும் மகாலட்சுமி, இரவு எவ்வளவு நேரமானாலும் தனக்கு அமைத்து கொடுத்துவிடுவார் என்று சில சண்டைகள் கூட வந்துள்ளது. அத்தருணத்தில் தான் நடிப்பதை நிறுத்திவிடவா என்று கேட்பாள்.
தனது அம்மாவிற்கும், மகாலட்சுமிக்கும் ஏராளமான கருத்துவேறுபாடுகள் இருக்கும். அவ்வாறு வந்தாலும் இதுவரை எனது அம்மாவை பற்றி எதுவும் என்னிடம் கூறியதில்லை.
மகாலட்சுமி பல பிரச்சனைகளை சகித்துக்கொண்டு தன்னுடன் சந்தோஷமாக வாழ்வதாக ரவீந்தர் மனம் திறந்து கூறியுள்ளார்.