ரவி மோகனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஆர்த்தி வெளியிட்ட பதிவால் கவலையடைந்த ரசிகர்கள்
ரவி மோகனின் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவரின் மனைவி ஆர்த்தி ரவி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரவிமோகன்.
இவர், கடந்த சில நாட்களாகவே, தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார்.
ஆனால் இன்னும் ஆர்த்தியுடனான உறவுக்கு விவாகரத்து கொடுக்காத நிலையில், பொது வெளியில் வேறு கெனிஷா என்ற பெண்ணுடன் உலா வருகிறார்.
இவ்வளவு பெரிய மகன்களா?
இந்த நிலையில், தன்னுடைய கணவரை இழந்த சோகத்தில் ஆர்த்தி ரவி பதிவுகளை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ரவிமோகன்- கெனிஷாவின் காணொளி வெளியான தினத்தில் ஒரு அறிக்கையொன்றை பகிர்ந்தார்.
இதனை தொடர்ந்து, அன்னையர் தினத்தன்று தன்னுடைய மகன்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கும் பொழுது இதெல்லாம் தேவையா?” என கவலையடையும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |