சரிகமப டைட்டில் வின்னர் திவினேஷிற்கு நடுவர் கொடுத்த அதிர்ச்சி பரிசு: கண்ணீரில் தந்தை
சரிகமப லி'ல் சாம்ப்ஸ் சீசன் 4 இல் டைட்டில் வின்னராக தடம் பதித்த திவினேஷின் தந்தைக்கு நடுவர் பெருந்தொகை பரிசுப்பொருளை கொடுத்தார்.
சரிகமப
ச ரி கா ம ப சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி பிரபல டிவி நிகழ்ச்சிகளிலேயே மக்கள் மனத்தில் தீராத இடத்தை பிடித்த ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் திறமைக்கு திறமைசாலிகளாவர்.
இந்த நிலையில் கடந்த வருடம் தொடக்கம் 6 மாதங்களாக தொடர்ச்சியாக பல சுவாரஸ்ய சுற்றுக்களுடன் நேற்றைய தினம் தன் பயணத்தை நிறுத்தி கொண்டது சரிகமப லி'ல் சாம்ப்ஸ் சீசன் 4. இதில் இறுதி சுற்றுக்கு 6 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் டைடில் வின்னராக போட்டியாளர் திவினேஷ் தெரிவு செய்யப்ப்டார். இவருக்கு 1000000 ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இது நிகழ்ச்சிக்கான சட்டதிட்டங்களுக்கு அமைய வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திவினெஷ் நடுவர்களிடம் ஏற்கனவே "என் தந்தைக்கு ஒரு பால் வேன் வாங்க விரும்புகிறேன்.
நிகழ்ச்சியில் பங்கேற்க நான் இங்கு வந்ததிலிருந்து, என் தந்தை என்னுடன் வருகிறார், மேலும் அவரது வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது" என்றார். அதற்கு நடுவர் ஸ்ரீனிவாஸ் அதை பண்ணிரலாம் என கூறியிருப்பார்.
இதை உண்மையாக்கும் வகையில் போட்டியாளர் திவினேஷ் வீட்டில் இல்லாத போது நடுவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்களின் வீட்டிற்கு நேராக சென்று வண்டி ஒன்றை நன்கொடையாக வழங்கி விட்டு வந்துள்ளார். இதன் விலை சுமார் 6 லட்சங்களுக்கும் மேல்என தகவல் வெளியாகி உள்ளது. இது இறுதிச்சுற்று மேடையில் ஒலிபரப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |