ஒட்டுமொத்தமாக ஆளே மாறிய ரவி மோகன்... புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரவி மோகன் தனத மனைவி ஆர்த்தியை பிரிவதாக விவாகரத்து கோரியுள்ள நிலையில், தற்போது அவரது தோற்றம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் ஆர்த்தி தம்பதிகளின் வாழ்க்கை தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டது.
கெனிஷா தனது வாழ்க்கையில் தன்னை புரிந்து கொண்டு தோழியாக இருந்தவர் என்றும் அவர் தன்னைவிட்டு சென்றுவிட்டதாக கூறி மனம் கஷ்டப்பட்டார்.

மேலும் தனத வாழ்க்கையில் மனைவி மற்றும் மாமியாரால் ஏற்பட்ட பிரச்சனைகள், சிக்கல்கள் என அனைத்தையும் ஆதங்கமாக கொட்டினார்.
ரவி மோகனுக்கு தெரவி மருத்துவராக வந்தவர் தான் கெனிஷா. இவர் தனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டு தவறான புகைப்படத்தினை வெளியிடுவதாகவும், தான் சென்னையை விட்டே செல்வதாக கூறி வெளியேறினார்.
ஆன்மீகத்தில் ரவிமோகன்
மூன்றெழுத்து நடிகை குறித்து பல உண்மைகளையும் வெளியே கூறிய ரவிமோகன், தனது வாழ்க்கையில் உள்ள விவாகரத்து பிரச்சனை முடிவிற்கு வரும்வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.
இந்நிலையில் ரவி மோகன் ஆன்மீகத்தில் இறங்கியுள்ள நிலையில், சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். 41 நாட்கள் விரதம் இருந்து கோவிலுக்கு செல்லவும், இந்த விரத நாட்களில் செல்போன் பயன்படுத்தக்கூடாது எனவும் உறுதி எடுத்துள்ளாராம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |