பிளாக் மேஜிக் செய்து திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்கள்.. கதறி அழுத ரவி மோகன்
கெனிஷாவுடன் நட்பை முறித்துக்கொண்ட ரவி மோகன் தன்னுடைய இல்லத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்ணீருடன் பேசி தற்போது பல விடயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

உருக்கமாக ரவி மோகன்
" நான் இத்தனை ஆண்டுகள் சம்பாதித்த அனைத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டேன். என் பெயரில் சொந்தமாக ஒரு வங்கி கணக்கு கூட இல்லை.
என் பெயரில் ஒரே ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட் மட்டும்தான் இருந்தது. அதில் நான் எந்த செலவு செய்தாலும் உடனே எனக்கு போன் செய்து என்ன செலவு என்று கணக்கு கேட்பார்கள். என் பணத்தை தானே நான் செலவு செய்தேன்.
அவர்கள் நான் சாகவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாரையும் முடித்துவிட்டு தான் நான் சந்தோஷமாக சாவேன். ஏற்கனவே நான் என்னை நானே வறுத்திக்கொள்ள தொடங்கிவிட்டேன்.
என்னை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இத்தனை ஆண்டுகள் பிளாக் மேஜிக் செய்து வந்தார்கள். இப்போதும் அதை செய்து வருகிறார்கள்.
இதனால் நான் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தால் ஒரு மரியாதை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன்.

அதுகூட எனக்கு அந்த வீட்டில் இல்லை. ஒருத்தருடைய வாழ்க்கையில் விளையாடக் கூடாது. ஒருத்தருடைய இமேஜுடன் விளையாடக் கூடாது .
என்னுடைய கடந்த வாழ்க்கையில் 14 வருடம் வாழ்ந்துள்ளேன். ஃபெமினிசம் என்றால் என்ன தெரியாதா? என் படங்களில் பெண்ணின் உரிமையை பற்றி பேசுகிறேன்.
நான் தப்பாக பெண்களை பேசுவேனா? என் தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. என்னுடைய பிள்ளையை நான் எப்படி விட்டுவிடுவேன்.
அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். ஆனால் இன்று என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. பள்ளிக்கு கூட பாதுகாவலர்கள் உடன் அனுப்புகிறார்கள்.
அந்த வாழ்க்கை வேண்டாம் என தெறித்து ஓடி வந்தேன்.நான் எப்படி சூட்டிங் வர்றானு பார்க்கிறான் என சொல்கிறார்கள். அவர்களே தயாரிப்பாளராக்கியதே நான் தான்.
வீட்டைவிட்டு எதுவும் இல்லாமல் வந்தவன் நான். இன்று நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். அவர்கள் கோடிக்கணக்கில் வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
என் தாய் Cyber புல்லிங் என்று நிற்கிறதோ? ஒரு பெண் என்னை புரிந்துகொண்டு வந்தார். இப்போது அவரையும் (கெனிஷா) காலி செய்து அனுப்பிவிட்டார்கள்.
நான் பார்க்காத நடிகைகளா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். 45 வயதில் அழகான பெண்கள் பின்னால் எப்படி செல்ல முடியும்.என் பசங்களுக்காக வாயை மூடிக்கொண்டு இருந்தேன்.

என் அப்பா அம்மா அந்த பெண் வேண்டாம் என காலில் விழுந்து கெஞ்சினார்கள். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் நான் வந்திருப்பேனா? வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டேன்.
எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்கப்போவதில்லை.
என்னை அடிமையாக வைத்திருந்தார்கள். கையை அறுத்துக்கொண்டு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்தார்கள். மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார். ஒருத்தர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்"
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |