விஜய் சார் என் மனைவி உயிரை காப்பாத்துங்க! முதல்வரிடம் கெஞ்சி கேட்ட நடிகர் முத்துக்காளை
காமடி நடிகர் முத்துக்காளை தன்னுமைய மனைவிக்கு மூளையில் ரத்த கசிவு இருப்பதால் தன்னுடைய மனைவியை காப்பாற்ற முதல்வர் விஜய்யிடம் உதவி கேட்டுள்ளார். இந்த காணொளி வைரலாகி வருகின்றது.

முதல்வர் விஜய்
தமிழ் சினிமாவில் நடிகர் முத்துக்காளை வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நட்சத்திரங்களுடன் நடித்து தற்போது வரை தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு வந்துள்ளார்.
படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதற்கிணங்க நடிகர் முத்துக்காளை சமீபத்தில் 3 டிகிரிகள் படித்து அதற்கு சான்றிதழும் வாங்கி இருந்தார்.
முதலில் ஸ்டண்ட் பிரிவில் சாதிக்க வேண்டும் என்றுதான் தனது சொந்த ஊரான ராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு வந்தார்.
இப்படி வந்தவருக்கு சினிமா ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்ததது. மேலும் ஏவிஎம்மில் சில வேலைகலையும் செய்தார்.

காதலுக்கு மரியாதை, பொன்மனம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் முத்துக்காளை. சில காலமாக குடிக்கும் அடிமையாகியிருந்தார் முத்துக்காளை.
பின்னர் தனே முடிவெடுத்து அதிலிருந்து வெளியே வந்தார். இப்போது இவருக்கு வயது 50.
தற்போது இவருடைய மகனும் நல்ல படிப்பை இப்போது படித்துக்கொண்டிருக்கிறார் இந்த நிலையில் கடந்த 17 நாட்களாக தான்
தனியாளாக தன்னுடைய மனைவி உயிரை காப்பாற்ற கஷ்டப்படுவதாகவும் அதற்கு முதல்வர் விஜய்யை உதவி செய்யுமாறு கெட்டம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முத்துக்காளையின் வேண்டுகோள்
முதடர்க்காளை அந்த காணொளியில் தன்னுடைய மனைவி மாலதிக்கு அண்மையில் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு வயது 47. மேலும் அவருடைய மனைவி கடந்த 17 நாட்களாக மருத்துவ மனையில் பேராடிக்கொண்டு இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும் கிருமி தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

சுயநினைவும் இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு மேல் சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக முத்துக்காளை கூறுகிறார்.
இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை கிடைக்க முதலமைச்சர் விஜய் உதவி செய்ய வேண்டும் என அந்த பதிவில் முத்துக்காளை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜய்யுடன் யூத், தமிழன், மின்சார கண்ணா, பகவதி, சுறா ஆகிய படங்களில் முத்துக்காளை நடித்திருக்கிறார். தற்போது இந்த முத்துக்காளையின் பிரச்சனைக்கு முதல்வர் விஜய் பதில் கொடுப்பாரா? என்பது தற்போது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முதலமைச்சர் உதவ வேண்டும்... செய்வாரா? pic.twitter.com/44GhKpR6M1
— vikram muthu (@vikrammuthu8) May 16, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |