கெனிஷா விவகாரம் : தேவைப்பட்டால் ... ஆர்த்தி ரவி வெளியிட்ட பதியிட்டுள்ள அதிரடி பதிவு!
கெனிஷா - ரவிமோகன் சர்ச்சை விவகாரத்தில் தற்போது ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன் சர்ச்சை
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில், உள்ள நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷா மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார். இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

கெனிஷா பதிவு
இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, ‘நடிகர் ரவி மோகனின் குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ எனத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ரவி மோகன் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு ஒரு தெரபிஸ்டாக மட்டுமே தான் உதவத் ஆரம்பித்தாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பெற்றோரையும், 18 வயதில் திருமணமாகி தனது கருவையும் இழந்த வலியைச் சுமக்கும் தான் ஒருபோதும் இன்னொருவர் குடும்பத்தைக் கெடுக்க நினைக்க மாட்டேன் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், கடந்த சில நாட்களாகத் தன்னை நோக்கி வீசப்பட்ட விமர்சனங்களாலும், ஆன்லைன் கிண்டல்களாலும் மனமுடைந்து போனதாக தெரிவித்துள்ள கெனிஷா, சென்னையை விட்டு வெளியேறுவதாகவும், தனது இசை மற்றும் சிகிச்சை பணிகளை முற்றிலுமாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
ஆர்த்தி ரவி புதிய பதிவு
இந்நிலையில், ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள பதிவில், "தூங்கும் சிங்கத்தை எப்போதும் எழுப்பக் கூடாது. அதுவும் அவள் ஒரு தாய் சிங்கமாக இருந்தால் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். என்னுடைய கண்ணியமான அமைதியை பலவீனம் என்று தவறாக நினைக்கக் கூடாது அல்லது அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

தேவைப்பட்டால், என் குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க, நான் என் வசதியான சூழ்நிலையை விட்டு வெளியே வந்து உண்மையோடு உலகை எதிர்கொள்வேன். ஏனெனில், உண்மை எப்போதும் வெல்லும்." என்று பதிவிட்டுள்ளார் குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |