42 வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமா? சிம்புவின் பிட்னஸ் சீக்ரெட் இதுதானாம்
நடிகர் சிம்பு 42 வயதில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சிம்பு, தற்போது 42 வயதிலும் இளமையாக காணப்படுகின்றர்.
கொரோனாவிற்கு முன்பு உடல் எடை அதிகரித்து காணப்பட்டு சிம்பு, மிகவும் சிரமப்பட்டு உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழையபடி மாறி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தற்போது சிம்பு தனது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திற்கான ரகசியங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது உடலில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் நீங்கள், உணவு கட்டுப்பாடு இல்லை என்றால், மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்துமாம்.
உடலை பிட்டாக வைத்திருக்க இரவு நேரத்தில் அதிக கனமான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்றும், லேசான உணவுகளை மட்டும் இரவில் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
சிம்பு அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து, ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் காரத்தன்மை இல்லாத உணவுகளை தினசரி எடுத்துக் கொள்கிறாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |