மனைவி இல்லாமல் தனியாக... புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்! என்ன நடந்தது?
தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரதும் திருமணப் பேச்சுதான் கடந்த காலங்களில் ஹொட் டோக்.
சமூக வலைத்தளத்தில் எங்கு பார்த்தாலும் இவர்களின் செய்திதான் காணப்பட்டது.
இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் திருப்பதியில் முடிந்தது.
பல கடுமையான விமர்சனங்கள் இவர்களின் திருமணத்தைக் குறித்து எழுந்தாலும் அவையெல்லாவற்றையும் சிரித்த முகத்துடன் இருவரும் கடந்து வந்துவிட்டார்கள்.
அதன் பின்பு தனி ஜெட்டில் ஹனிமூன், குலதெய்வ கோயில் வழிபாடு, ஃபாரின் ட்ரிப் என இருவரும் ஒரே குதூகலமாக இருந்தனர்.
இருவரும் அடிக்கடி தங்களது ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு, தங்களது மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொள்வர்.
ஆனால், சமீபகாலமாக தனித்தனியாகவே இருவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ரவீந்தர் 'கடினமாக காலங்களில் சிரிப்பு ஒன்றே போதும்... நாம் சோகமாக இருந்தால் அவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும்' என்ற கேப்ஷனுடன் தனியாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.