நைட்டியுடன் சமூக வலைத்தளங்கள் உலா வரும் மகாலட்சுமி!டுவிஸ்ட்டுடன் கேள்வியெழுப்பிய நெட்டிசன்கள்
இரவு போடும் நைட்டியுடன் புகைப்படம் வெளியிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமியை கேள்வி மேல் கேள்வி கேட்டு ரசிகர்கள் கடுப்பேத்தியுள்ளார்கள்.
சின்னித்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை மகாலட்சுமி.
இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமமான சேட்டைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர்களின் மனதை உடைக்கும் அளவிற்கு மகாலட்சுமி கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இரண்டாவது காதல் திருமணம்
ஆம், நடிகை மகாலட்சுமி எந்த விதமான அறிவிப்பும் இன்றி, தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்களை நீண்டக்காலமாக காதலித்து வந்த நிலையில் இரகசியமாக வீட்டிலுள்ளவர்களை மட்டும் வைத்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவருக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் முதல் கணவருக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தையும் உள்ளது. இருந்தாலும் வாழவேண்டிய வயது என்பதால் இவரின் திருமணம் பெரியவர்கள் முன்னிடையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இவர்களின் திருமணத்திற்கு பிறகு ரவீந்தரின் உடல் பருமன் காரணமாக நயனின் திருமணத்தை விட மிகவும் அதிகமாக சமூக வலைத்தங்களில் பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து ரவீந்தரை பணத்திற்காக தான் திருமணம் செய்துக் கொண்டதாகவும், இவர்களின் திருமணம் முறிந்து விடும் எனவும், இவர்களின் உள்விவகாரம் குறித்தும் பல கேள்வியெழுப்பி வந்தார்கள்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவீந்தரும், மகாலட்சுமியும் பல பேட்டிகள் கொடுத்து வந்தார்கள். தொடர்ந்து இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விடயத்தையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில். சமிபத்தில் இரவு தூங்கும் போது நைட்டியுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமியை சரமாறியாக கழுவி ஊற்றியுள்ளார்கள்.
மேலும் “இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் இவரின் கருப்பத்தை அறிவிக்குமாறும்” கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.