நெருக்கமாக அணைத்தபடி ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட அஜித்- ஷாலினி
சினிமாத்துறையைப் பொருத்தவரையில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் உள்ளனர்.
ஆனாலும், திடீர் திடீரென்று அவர்களுக்குள் சண்டை, சச்சரவுகள், முரண்பாடுகள், சில சமயங்களில் விவாகரத்துக்கள் என அவ்வப்போது செய்திகள் வெளியாகும்.
ஆனால், தற்போது வரையில் இதுபோன்ற எந்தவிதமான கிசுகிசு செய்திகளும் பரவாத ஜோடிகளில் அஜித்- ஷாலினியும் உள்ளடங்குவர்.
தமிழ் திரையுலகுக்கு அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் அஜித். தொடர்ந்து வாலி, காதல் மன்னன், முகவர் போன்ற படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார்.
அதேபோல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிற்காலத்தில் காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷாலினி.
அஜித் - ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.
அவ்வப்போது இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வரும் நிலையில், இவர்கள் அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
அஜித் - ஷாலினி இருவரும் தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்ற இடத்திலேயே குறிப்பிட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களின் இந்த ரொமான்டிக் புகைப்படங்கள் அவர்கள் நடித்த அமர்க்களம் திரைப்படத்தில் உள்ள உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற பாடலை நினைவுக் கூர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wowww, Them ?? pic.twitter.com/HIbc6UZSSW
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) March 20, 2023