6 மாத திருமண வாழ்க்கை! மனைவி குறித்து உருக்கமாக பேசிய ரவீந்தர்
சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளப் பக்கங்களை திறந்தாலே, ரவீந்தர் - மகாலட்சுமி திருமணப் பேச்சுதான் ஒலித்துக் கொண்டிருந்தது.
பல்வேறு சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியிலும் இந்த ஜோடியின் திருமணம் சிறப்பாகவே நடந்தது. தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த வருடம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். மகாலட்சுமியே தனக்கு வாழ்க்கைத் துணையாக வந்துவிட்டதாக ரவீந்தர் பூரிப்படைந்தார்.
ரவீந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணம். அதேபோல் மகாலட்சுமிக்கும் முதல் திருமணத்தில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் மகாலட்சுமி பணத்துக்கு ஆசைப்பட்டே ரவீந்திரனை திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
அவ்வாறு எழுந்த விமர்சனங்களுக்கு மிகவும் பொறுமையாக பதிலளித்த இந்த ஜோடி, தற்போது தங்களது திருமண வாழ்க்கையில் 6 மாதங்களை கடந்துள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
தயாரிப்பில் மகாலட்சுமி
இந்நிலையில் சீரியல்களில் நடித்துவரும் மகாலட்சுமி அவற்றையெல்லாம் நிறைவுசெய்துவிட்டு, அடுத்ததாக சீரியல் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமில்லாமல் தனது கணவரின் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட உள்ளாராம். இதனிடையே சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளைப் போட்டு அதிக ஃபோலோவர்ஸை பெற்றுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டில் நடந்த ஹோமத்தின் வீடியோவை வெளியிட்ட ரவீந்தர், மற்றவர்களையும் கருத்தில்கொண்டு இந்த ஹோமத்தை பிரமாண்டமாக நடத்தியதாக அவர் தெரவித்தார்.
இந்நிலையில் தற்போது தனது மனைவி மகாலட்சுமியுடன் கோயிலுக்கு சென்று அந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டு, 'வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை. வழி இல்லாத வாழ்க்கை இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
லவ் யூ மோர்
திடீரென 'என்னவள் வந்தாள் விழி தந்தாள்' என்ற கவிதையையும் தனது நோன்சென்ஸ் எல்லாவற்றையும் மகாலட்சுமி பொறுக்க மாட்டாள், ஆனால் அவளுடைய அன்பு அனைத்தையும் மாற்றக்கூடியது என்பதையும் அவள் நிரூபித்துள்ளாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு 'லவ் யூ மோர்' என்று மகாலட்சுமி கமெண்ட் செய்துள்ளார்.