அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா?
பான் இந்தியா நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் 8 ஆண்டுகள் காதலின் பின் உறுதியாகியுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

கடந்த வருடம் இவர்களுக்கு ரகசியமான நிச்சயதார்தம் நடைபெற்ற நிலையில், விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

ரசிகர்கள் இந்த ஜோடியை "Virosh" என்று அழைக்கிறார்கள். ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் அந்த வார்த்தையைக்கு மதிப்பளிக்கும் விதமாக இவர்களின் திருமணத்திற்கு 'The Wedding of VIROSH' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வயது வித்தியாசம்
இதனிடையே விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்தும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாக தேடிவருகின்றார்கள்.

இந்நிலையில், இந்த ஜோடிகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா மே 9, 1989 இல் பிறந்தார், தற்போது அவருக்கு 36 வயது. ராஷ்மிகா மந்தனா ஏப்ரல் 5, 1996 இல் பிறந்தார், இப்போது அவருக்கு 29 வயது. அதன்படி இவர்கள் இருவருக்கும் ஏழு வயது இடைவெளி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |