80 லட்சத்தை பறிகொடுத்த நடிகை ராஷ்மிகா! நடந்தது என்ன?
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் ரூ.80 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
நடிகை ராஷ்மிகா நடிப்பில் தற்போது அனிமல் என்கிற படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், பான் இந்தியா படமாக இதனை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமின்றி தெலுங்கில் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து வருகின்றார். தமிழிலும் ரெயின்போ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார்.
இவ்வாறு நடிப்பில் முன்னணியாக இருந்து வரும் இவரிடம், இவரது மேனேஜர் பண மோசடி செய்துள்ளாராம். ஆம் ரூபாய் 80 லட்சம் மோசடி செய்துள்ள அந்த மேனேஜரை வேலையிலிருந்து ராஷ்மிகா நீக்கியுள்ளாராம். குறித்த நபர் சினிமாவில் அறிமுகமான ஆரம்பகாலத்திலிருந்தே மேனேஜராக இருந்து வருகின்றார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |