ராஷ்மிகா மந்தனாவை தெரியும்.. அவங்க அப்பா, அம்மாவை பார்த்ததுண்டா?
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள விரஜ்பேட்டையில் பிறந்தவர் ராஷ்மிகா மந்தனா.
2014ம் ஆண்டு மொடலாக அறிமுகமாகி, கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையானார்.
படங்கள் மட்டுமின்றி ரசிகர்கள் அதிகம் தேடப்படும் நாயகிகளில் முக்கியமானவராக திகழ்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இதற்கு இவரது ஸ்டைலையும் காரணமாக குறிப்பிடலாம், அழகான வசீகரிக்கும் தேகம் மற்றும் புன்னகையால் இளசுகளை கட்டிப்போட்டுள்ளார்.
அதிகளவு தண்ணீர் அருந்துவது, பழச்சாறுகள் அருந்துவது என தன்னுடைய பாட்டி மற்றும் அம்மாவின் குறிப்புகளை தவறாமல் பின்பற்றி வருகிறாராம்.
எப்போதுமே டிரெண்டிங்கில் இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தன்னுடைய குடும்பத்தினருடன் ராஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் தாய், தந்தை மற்றும் தங்கையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அப்பா சுமன், அம்மா சுமன் மந்தனா , தங்கை ஷிமன் மந்தனா ஆகியோர் இருக்கின்றனர்.
என்னதான் தொடர்ச்சியாக படம் நடித்தாலும், கன்னடத்தில் 'கிரிக் பார்ட்டி', தமிழில் 'சுல்தான்' தெலுங்கில் 'செல்லோ', இந்தியில் 'மிஷன் மஜ்னு' என முதன் முதலாக அறிமுகமான படங்கள் என்றுமே ஸ்பெஷல் தான் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.