தினமும் என் வீட்டு வேலைக்காரர்களின் காலை தொட்டு கும்பிடுவேன்.... - ரஷ்மிகா ஓபன் டாக்
தினமும் நான் என் வீட்டு வேலைக்காரர்களின் காலை தொட்டு கும்பிடுவேன் என்று நடிகை ராஷ்மிகா கூறிய தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.
நடிகை ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய்யுடன் அவர் நீண்ட காலமாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘வாரிசு’ படத்தின் மூலம் நிறைவேறியது.
இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் பல கோடிகளை அள்ளி வசூல் சாதனைப் படைத்தது. தற்போது, அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட் தவிர்த்து பாலிவுட்டிலும் பிசியாகியுள்ளார் ரஷ்மிகா.
வேலையாட்களின் காலை தொட்டுக் கும்பிடுவேன்
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
சின்னச் சின்ன விஷயங்கள் கூட எனக்கு ரொம்ப முக்கியமானது. காலையில் நான் எழுந்தவுடன் என் செல்லப் பிராணிகளுடன் விளையாடுவேன். அதன் பிறகு என்னுடைய நண்பர்களை சந்தித்து பேசுவேன். அது எனக்கு எப்போதும் சந்தோஷத்தை கொடுக்கும்.
தினமும் நடக்கும் சிறு சிறு விவரங்களை என் டைரியில் எழுதி வைப்பேன். எங்கள் வீட்டில் தினமும் அனைவரின் காலை தொட்டு கும்பிடுவேன். மரியாதைக்காக அப்படி செய்வேன். யாரையும் பிரித்துப் பார்க்க மாட்டேன். அதேபோல், எங்கள் வீட்டில் வேலை செய்பவரின் காலையும் தொட்டு கும்பிடுவேன் என்றார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடே... என்ன ஒரு மரியாதை. உங்கள் அம்மா உங்களை நல்லபடியாக வளர்த்திருக்கிறார்கள். வீட்டில் வேலை செய்பவரின் காலை தொட்டு கும்பிடுவது எல்லாம் வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.