சாமி சாமி பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட சிறுமி! ராஷ்மிகா போட்ட பதிவு; வைரல் வீடியோ
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான படம் தான் புஷ்பா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது.
அப்படத்தில், குறிப்பாக சாமி சாமி என்ற பாடல், பட்டி தொட்டி எங்கும் பரவியது. பலரும் இப்பாடலுக்கு நடனத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், சாமி சாமி என்ற பாடலுக்கு குழுவாக குழந்தைகள் ஒன்றிணைந்து நடனமாடியுள்ளனர். அதில், ஒரு சிறுமி தன்னுடைய அட்டகாசமான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக, திரைப்படத்தில் வரும் ராஷ்மிகாவின் நடன காட்சிகளைப் போலவே அந்த சிறுமி ஆடியுள்ளார்.
இந்த காட்சியை கண்ட ராஷ்மிகா மந்தனா இந்த குழந்தையை தான் பார்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Maaaaadddddeeeeee myyyyy daaaaaay.. I want to meet this cutie..?
— Rashmika Mandanna (@iamRashmika) September 14, 2022
how can I? ? https://t.co/RxJXWzPlsK