பிறந்த குழந்தையை தாய் எப்படி தூங்கும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும்?
குழந்தை வளர்ப்பதில் தாய் முக்கிய பங்கு வகிக்கிறார். குழந்தையை பராமரிப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும்.
குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும். குழந்தை பிறந்த பின் அதனுடைய ஒவ்வொரு செயலுமே தாய்மார்களுக்குக் போராட்டம் தான்.
குறிப்பாகக் குழந்தைகளின் தூக்கம். குழந்தையின் தூங்கும் நேரம் பழக்கமாகும்வரை தாய்மார்களுக்குத் தூக்கமில்லாத பகல்களும், இரவுகளுமே மிஞ்சும். குழந்தை பிறந்த முதல் சில மாதங்கள் வரை, அதற்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது. எப்போது உறங்கும், எப்போது விழித்திருக்கும் என சொல்ல முடியாது.
எனவே மாதங்கள் போகப் போகத்தான் இது சரியாகும். ஆறாவது மாதத்திலிருந்து சில குழந்தைகள் இரவு வேளைகளில் தூக்கமில்லாமல் அழலாம். இந்த நேரத்தில் தான் குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும்.
மேலும், தூக்கம் என்பது இர வு நேரச் செயல், அதாவது எந்தவித விளையாட்டும் இல் லாத நேரம் என அதற்கு உணர்த்த வேண்டும். தொடர்ந்து குழந்தை விழித்துக்கொண்டிருக்கும் நே ரத்தில் பகல் வேளைகளில் நிறைய வேடிக்கை காட்டவும் இரவில் அதை தவிர்க்கவும் உங்களுக்கு வசதியாக இருக்கும்.
உங்களுக்கு வசதியான நேரத்தில் குழந்தை மீது கவனம் செலுத்தி தூங்க வைக்க பழகுங்கள். பின் உணவு ஊட்டிய சிறிது நேரத்திற்கு பின் ஓய்வெடுக்க விடுங்கள். காற்றோட்டமான உடைகளை அவர்களுக்கு அணிந்து விடுங்கள்.
மேலும், குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும். அவர்கள் அருகில் கைகள் படும் படி எந்த ஒரு ஆபத்தான உபகரணங்களை வைக்க வேண்டாம்.
தூக்கமே இல்லாமல் அழும் பட்சத்தில் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும் பார்க்கவும்.
முக்கியமாக தினம் ஒரே நேரம் தூங் கும் பழக்கத்தை அதற்கு ஏற்படுத்தவும். எப்படியோ தூங்கினால் போது மென ஒவ்வொரு நேரம் தூங்க வைக்க வேண்டாம்.