உடல் எடை சீக்கிரமாக குறைய வேண்டுமா? வெறும் வயிற்றில் பீட்ரூட்டை இப்படி சாப்பிட்டால் போதும்
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் உடல் பருமன் ஒரு பிரச்னையாக உள்ளது. இதற்கு நமது உணவு பழக்கமும் வேலையும் தான் காரணம். நம்மில் பலருக்கு உடலை வருத்தி செய்யும் வேலை இல்லை.
உடல் எடையை குறைக்க பலர் தங்கள் பொழுதை ஜிம்மில் செலவழிக்கின்றனர். கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க முயல்கின்றனர்.
இருப்பினும் இதனை குறைக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. இயற்கை காய்கறிகள் இதற்கு பலவகையில் உதவியாக இருக்கின்றது. அதில் பீட்ருட்டும் ஒன்று. இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.
தற்போது உடல் எடையை சீக்கரம் குறைக்க பீட்ருடை எப்படி எடுத்து கொள்ளலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் -3 கப்
புதினா இலைகள் -சிறிதளவு
ஆப்பிள் சைடர் வினிகர் -2 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் -1/2
வறுத்த பீட்ரூட் -1/2
செய்வது எப்படி?
ஒரு ஷேக்கரை எடுத்து, தண்ணீர், புதினா இலைகள், ஆப்பிள் சைடர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சேர்க்கவும். நன்றாக குலுக்கி, 5-10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
இப்போது சுவையான பீட்ரூட் டீடாக்ஸ் வாட்டர் குடிக்கவும். வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இது வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது ஆரோக்கியமான எடையை அடையவும் பராமரிக்கவும் உதவுகிறது.
நன்மைகள்
இந்த பானம் உடலில் உள்ள கொழுப்பு சதவீதத்தை குறைக்கிறது. வயிற்று கொழுப்பை இழக்கச் செய்கிறது மற்றும் இரத்த ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கிறது.
இது உங்கள் வயிறை சுத்தப்படுத்துவதுடன் செரிமான கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது. தினமும் இந்த டீடாக்ஸ் நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குவது நல்லது.
இது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவை தக்கவைப்பதுடன் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது.
எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது, இது ஒரு மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். இது உடலில் இருக்கும் நச்சு பொருட்களுடன் சண்டையிடுவதுடன் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.