மாரடைப்பு வராமல் தடுக்கும் அற்புதமான பழங்கள்... எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வாழ்க்கையில் அனைவருமே இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க மாரடைப்பு வந்த நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் உட்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே இப்பதிவில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
பெர்ரி
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் பெர்ரிகளை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த பழம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
கை, கால் வீங்கி இருக்கா? இந்த ஆபத்தாக கூட இருக்கலாம் ஜாக்கிரதை
ராஸ்பெர்ரி
இந்த ரஸ்பெர்ரி இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சிறியதாக காணப்படும் இந்தப் பழத்தை நாக்கில் வைத்தவுடன் எளிதில் கரைந்துவிடும்.
இந்த பழத்தை உண்மையில் சாப்பிடப்போனால் இதயத்திற்கு இரத்தத்தை சென்றடையும் நரம்புகள் பிட் ஆக இருக்கும்.
இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
நீரிழிவு நோயினை தலைதெறிக்க ஓடவைக்கும் அருமையான ஜுஸ்! எப்படி தயார் செய்வது?
திராட்சை
திராட்சை பழம் இதயத்திற்கு நன்மையை தரும். இதில், அதிக அளவிலான பாலிபினால்கள் மற்றும் பினாலிக் அமிலங்கள் உள்ளன.
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படும். இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆப்பிள்
ஆப்பிள் பழம் சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதய நோயாளிகளுக்கு ஆப்பிள் ஒரு சஞ்சீவி என்று நம்பப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் அல்லது இதயத்தில் அடைப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வரலாம்.