வெளியேறிய வனிதாவை கடுப்பேற்றிய ரம்யாகிருஷ்ணன்: கோபத்தின் உச்சத்தில் கொப்பளிக்கும் வனிதா! புதிய ப்ரொமோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் வெளியாகி நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையே நடந்த மோதல், வாக்குவாதம் ஆகிய காட்சிகள் புரொமோ காணொளியாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்த புரோமோ வீடியோவில் ஜித்தன் ரமேஷ் மற்றும் சம்யுக்தாவின் நடனத்தையும், அனிதா மற்றும் ஷாரிக் நடனத்தையும் பார்த்து மெய்சிலிர்த்துபோனார் ரம்யா கிருஷ்ணன்.
’நடனம் என்றால் இப்படித்தான் இருக்கனும்’ என்று கமென்ட் கூறி, வேற லெவலில் அவர் சந்தோஷமடைந்து எழுந்து நின்று கை தட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை வனிதா கடுப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியும் அந்த ப்ரொமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ப்ரொமோ காட்சியால் வரும் ஞாயிறு அன்று பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்க வைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.