உடல் சூட்டை தணிக்கும் ரமழான் கஞ்சி: எப்படி செய்வது?
புனித ரமழான் மாதம் வந்து விட்டாலே அனைத்து இஸ்லாமியர்களும் புனித நோன்பை நோக்கத் தொடங்கி விடுவார்கள்.
இந்த புனித நோன்புக்காலங்களில் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் நோன்பு காலம் முடியும் வரை நோன்புக்கஞ்சி செய்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் பள்ளியில் செய்யும் அதே சுவையில் வீட்டிலும் நோன்புக் கஞ்சி செய்யலாம். எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள்
- பச்சை அரிசி - 1 கப்
- பாசி பருப்பு - 1/2 கப்
- கடலைப் பருப்பு - 1/2 கப்
- துவரம் பருப்பு - 1/2 கப்
- சின்ன வெங்காயம் - 8
- பட்டை - 1
- கிராம்பு - 4
- தக்காளி - 1
- இஞ்சி - சிறிதளவு
- பூண்டு - 10 பல்
- வெங்காயம் - 1
- கேரட் - 1 (சின்னதாய் நறுக்கியது)
- மல்லிக்கீரை - தேவைக்கேற்ப
- பச்சை மிளகாய் - 3
-
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
செய்முறை
முதலில் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும். பிறகு, ப்ரஷர் குக்கரில் பச்சை அரிசி, வறுத்த பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்கீரை, கேரட் ஆகிய அனைத்தையும் சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
பின்னர், அடுப்பை சிம்மரில் போட்டு இன்னொரு 5 விசில் வரும்வரைக் காத்திருக்கவும். தேவைக்கேற்ப, கஞ்சி பதமாக வரும்வரை சிம்மரில் கொதிக்கவிடுங்கள்.
பிறகு, அதனை தேங்காய் பாலுடன் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் கொதிவந்த பின் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
பின்னர் ஒரு கடையில் சிறிது எண்ணெய் விட்டு, பட்டை , கிராம்பு போட்டு மல்லிக்கீரை தேவைக்கேற்ப சேர்த்து தாளிக்க வேண்டும்.
இந்த தாளிப்பை தயார் நிலையிலுள்ள கஞ்சியில் சேர்த்து ஒருமுறை கிளறினால், கம கமனு ருசியான நோன்பு கஞ்சி தயார்!