11 ஆண்டுகள் கழித்து அப்பா ஆனார் ராம்சரண்: என்ன குழந்தை பிறந்திருக்கிறது தெரியுமா?
நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதியினர் 11 ஆண்டுகள் கழித்து தன் முதல் வாரிசை பெற்றிருக்கிறார்.
நடிகர் ராம்சரண்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ராம்சரண். இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் தான்.
இவர் தனது சினிமாத்துறையில் 2007ஆம் ஆண்டு அறிமுகமானவர் தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடம்பிடித்துக் கொண்டார் அதற்கு சான்றாக கடந்த வருடம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளி குவித்தது.
மேலும், இந்த திரைப்படம் பல விருதுகளை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் இடம் பெற்ற நாட்டுக் கூத்து பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பாடல் அண்மையில் ஒஸ்கார் விருதுகளைப் பெற்று பெருமைப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் குழந்தை
நடிகர் ராம்சரண் 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் 11 ஆண்டுகள் குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்து தற்போது தங்களின் முதல் குழந்தையை பெற்றிருக்கிறார்கள்.
இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பதை வைத்து பலரும் பல கருத்துக்கள் பேசிய வண்ணம் தான் இருந்தார்கள். இந்நிலையில் இன்று காலை ராம்சரண் மனைவி உபாசனா ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.
Actor @AlwaysRamCharan and his wife @upasanakonidela are blessed with a baby girl in Hyderabad.
— Ramesh Bala (@rameshlaus) June 20, 2023
Congratulations to the proud parents and the extended family on this joyous occasion.. #RamCharan #Upasana pic.twitter.com/WUc7UToSMz
மேலும், இவர்கள் இருவரும் தற்போது நலமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த இணையவாசிகள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |