மனைவியோடு ஜாலியாக ஊர் சுற்றும் ராம்சரண்... - வைரலாகும் வீடியோ...!
மனைவியோடு ஜாலியாக நடிகர் ராம்சரண் ஊர் சுற்றும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
RRR திரைப்படம்
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் ராம் சரண் ஆகியோர் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படம் சுமார் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இப்படம் பல கோடிகளை அள்ளியது.
ஆஸ்கர் நிகழ்ச்சி மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடல்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் 2023ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் மார்ச் 3ம் தேதி மீண்டும் வெளியிடப்பட்டது. சிறந்த பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மனைவியுடன் ஊர் சுற்றும் ராம்சரண்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், RRRயின் ஆஸ்கார் பிரச்சாரத்திற்கு மத்தியில் நடிகர் ராம் சரண், மனைவி உபாசனா லாங் டிரைவ் செய்தும், ஷாப்பிங் செய்தும் காரில் ஊர் சுற்றி வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ராம்சரணின் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#RamCharan, wife #Upasana go on long drive, shop, watch dolphins on #babymoon amid #RRR's #Oscar campaign; 'He is an international star now. But no escape when it comes to carrying shopping bags,' jokes a fan@AlwaysRamCharan #RRR #RamCharanUpasanababymoon pic.twitter.com/XsY78Jag9o
— HT City (@htcity) March 8, 2023