நீரிழிவு நோயை அலற விடும் சாலட்! எல்லையில்லாமல் சாப்பிடலாம்.. எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விடயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
ஆனாலும் இவர்களுக்கு சமைப்பது என்பது மிகவும் கடினமான விடயம் எந்த பொருளை அதிகம் சேர்த்து விடக் கூடாது.
நாம் சாப்பிடும் போது அந்த உணவு நன்றாக செரிமானமடைந்து உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும் தான் நினைப்பார்கள்.
அந்த வகையில் நீரழிவு நோயுள்ளவர்கள், இதய நோயுள்ளவர்களுக்கு சூப்பரான ராஜ்மா ஸ்வீட்கார்ன் சாலட் எப்படி செய்ய வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
ராஜ்மா - 1 கப்
ஸ்வீட்கார்ன் - 1 கப்
வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
வெங்காயத்தாள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
புதினா இலை - சிறிது
ராஜ்மா ஸ்வீட்கார்ன் சாலட் செய்முறை
முதலில் சாலட்டிற்கு தேவையான வெங்காயம், தக்காளி, புதினா, வெள்ளரிக்காய், வெங்காயத்தாள் ஆகியவற்றை வித்தியாசமான வடிவங்களில் வெட்டி வைத்து கொள்ளுங்கள்.
ராஜ்மா சாலட் செய்வது என்றால் ராஜ்மாவை முதல் இரவே ஊற வைத்து விட வேண்டும்.
மறுநாள் எடுத்து நன்றாக வேக வைத்து கொள்ளுங்கள். அதனுடன் ஸ்வீட்கார்னையும் சேர்த்து வேக விடுங்கள்.
இதனை தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வேக விட்ட ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, வெங்காயம், தக்காளி, வெங்காயத்தாள், வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
கலந்து விட்டு பரிமாறினால் சுவையான ராஜ்மா ஸ்வீட்கார்ன் சாலட் தயார்!