ரஜினிக்கு ரசிகர்கள் கொடுத்த அட்வைஸ்.... கொரோனா காலத்தில் தலைவா இப்படி செய்யலாமா?
நடிகர் ரஜினிகாந்த் நடைபயிற்சி மேற்கொண்ட போது எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவா... உங்க ஃபிட்னசுக்கு இது தான் காரணமா? என்றும் கொரோனா காலத்தில் மாஸ்க் இவ்வாறு போடலாமா என்றும் கேட்டு வருகின்றனர்.
உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரது ஸ்டைலுக்கும், நடிப்பிற்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் அடிமையாகவே இருக்கின்றனர்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்திருக்கவேண்டியது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஓர் ஆண்டாகத் தள்ளிப்போன நிலையில், கடந்த மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.
ஒரு மாதம் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினிகாந்த் அனைத்து காட்சிகளையும் முடிந்து விட்டுசென்னை திரும்பிய நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது இணையத்தில் ரஜினிகாந்த் வாக்கிங் செல்வது போல ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் மாஸ்க் போட்டுக்கொண்டு, டி ஷர்டில் ஹாயாக வாக்கிங் போகிறார்.
அந்த டி ஷர்டில் , லைவ், லவ், ரன் என எழுதப்பட்டுள்ளது.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைவா இது தான் உங்க ஃபிட்னசுக்கு காரணமாக என்று கேட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் மாஸ்க் சரியாக அணியாமல் இருப்பதால், தலைவா கொரோனா காலத்தில் இவ்வாறு செய்யலாமா என ரசிகர்கள் அட்வைஸும் செய்து வருகின்றனர்.
LIVE LOVE RUN ❤️#Superstar #Rajinikanth pic.twitter.com/7np7BCMSZR
— Prem kumar (@premrpk124) May 20, 2021