குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை எப்போது ஆரம்பிக்கலாம்? விளக்கமளிக்கும் மருத்துவர்
பொதுவாகவே குழந்தைகள் விடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் முக்கிய உணவாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், குழந்தைகள் வளர வளர அவர்களின் ஊட்டத்தச்து தேவையை பூர்த்தி செய்ய திட உணவுகளை அறிமுகப்படுத்துவது அவசியமாகின்றது.
குழந்தையின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான தருணம். இது பெற்றோர்களுக்கு சவாலாக விடயம் என்றாலும், இது குறித்து தெளிவான அறிவு இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
பொதுவாக 4 மாதம் தொடக்கம் 6 மாத குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை எப்போது ஆரம்பிக்கலாம் என்பது குறித்து பெரும்பாலான பெற்றோர் மத்தியில் குழப்பம் காணப்படுகின்றது.
குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை எப்போதிருந்து கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்போது ஆரம்பிக்கலாம்?
மருத்துவர் அருண்குமார் குறிப்பிடுகையில், அசைவ உணவுகளை எப்போது குழந்தைகளுக்கு ஆரம்பிக்க வேண்டும் என்ற விடயத்தில், பெற்றோர்களுக்கு மாத்திரமன்றி மருத்துவர்களுக்கு இடையிலும் கூட சில மாற்றுக்கருத்துக்கள் காணப்படுகின்றது.
சில மருத்துவர்கள் ஒரு வருடம் ஆன பின்னரே குழந்தைகளுக்கு அசைவ உணவை கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் ஜீரண பிரச்சினைகள் ஏற்படும் என குறிப்பிடுகின்றனர்.
அதில் எந்த உண்மையும் கிடையாது. உலக சுகாதார தாபனத்தின் அறிக்கையின் பிரகாரம், குழந்கைளுக்கு 6 மாதங்கள் கடந்த பின்னர் தாய்பாலில் இருந்து கிடைக்கும் இருப்புச்சத்து மற்றும் கால்சியம் மட்டும் போதாது. அதனை ஈடுசெய்ய அசைவ உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியம்.
அசைவர்கள் நிச்சயம் 6 மாதத்தில் இருந்தே மீன்,முட்டை அல்லது இறைச்சி இதில் ஏதாவது ஒன்றையேனும் குழந்தைக்கு கொடுக்கும் தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என்கின்றார்.
சைவம் மட்டும் உண்பவர்கள் முட்டை விரும்பினால் கொடுக்கலாம். இல்லாவிடில் 6 மாதத்தில் இருந்தே குழந்தையின் உணவுன் நட்ஸ் வகைகளை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |