குடித்துவிட்டு ரகளை செய்த இளையராஜா: மேடையில் ரஜினி உடைத்த உண்மை
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இசைஞானி இளையராஜா
சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா- சென்னையில் உள்ள நேரு உள் விளைாட்டு அரங்கத்தில் இந்த விழா நடந்து முடிந்துள்ளது.
அந்த விழாவில் இளையராஜா, முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேச தொடங்கிய இளையராஜா, “ விழா ஆரம்பிக்கும் முன்னர் தொலைபேசியில் பேசிய ரஜினிகாந்த் நாம் செய்த அனைத்தையும் கூறட்டுமா? என்றார். அதனை கேட்டதும் எனக்கு பயம் வந்து விட்டது.
நாம் செய்த அனைத்தையும் நானே கூறட்டுமா? என அவரும் கேட்டார். அப்போது இருக்கையில் இருந்த ரஜினிகாந்த் எழுந்து மேடைக்கு சென்று பேச்சை பாதியில் நிறுத்தினார்.
ரஜினிகாந்த் கொடுத்த அலப்பறை
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், “விஜிபி ஸ்டூடியோவில், ஜானி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இரவில் நானும், மகேந்திரன் சாரும் மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது இளையராஜா அங்கிருந்தார்.
அவரையும் இணைத்துக் கொண்டு குடிக்க ஆரம்பித்தோம். வெறும் அரைபாட்டில் பியரை குடித்த இளையராஜா அதிகாலை 3 மணி வரை தூங்க விடாமல் அலப்பறை செய்தார். இந்த கதையை கேட்ட அரங்கத்தினர் அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
மேலும் கூறிய ரஜினிகாந்த், சினிமாவில் சில கிசுகள் வர துவங்கி விட்டது. சினிமாவில் பிரபலங்களான சில நடிகைகளுடன் இவர் பேசிக் கொண்டிருக்கிறார். அண்ணன் பெரிய லவ். அதனால் தான் இவ்வளவு பாடல்கள் வருகின்றன..” என பேசிக் கொண்டிருக்கும் பொழுது அரங்கத்தில் சிரிப்பு சத்தம் அதிகரித்து விட்டது.
அரசு நிகழ்ச்சியில் மது குடித்து விட்டு அலப்பறை செய்த விடயத்தை பேசிக் கொள்கிறார்கள் என முதல்வர் சற்று அசௌகரியத்துடன் அமர்ந்திருந்தது காணொளியில் சிக்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |