52 வயதில் தந்தை செய்த சாதனை.. இன்ப அதிர்ச்சிக் கொடுத்த மகன்- இறுதியில் நடந்தது என்ன?
52 வயதில் தந்தை செய்த சாதனையை பார்த்த மகன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
52 வயதில் சாதனை
இலட்சியங்களையும் கனவுகளையும் அடைவதற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்பதற்கு உதாரணம் காட்டும் வகையில், 52 வயது தந்தையொருவர் செய்த விடயம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா- மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர், தன்னுடைய கனவான எம்.பி.ஏ பட்டத்தை தன்னுடைய 52ஆவது வயதில் பெற்றுள்ளார்.
இதனை அவருடைய மகன் மைத்ரேயா சாத்தே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து தந்தைக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.
3.63 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 35,000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்ற இந்த காணொளியில் தந்தை வீட்டிற்குள் வரும் பொழுது அவருடைய முக அமைப்பை கொண்ட முகமூடிகளை வீட்டிலுள்ளவர்கள் அணிந்து கொண்டு அந்நபர் போன்று காத்திருக்கிறார்கள்.
இதனை பார்த்தவுடன் குறித்த நபரின் திகைப்பு, ஆரவாரங்கள் மற்றும் கைதட்டல்கள் அவரை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில் இணையவாசிகள், நபருக்கு வாழ்த்துக்களையும், “எப்படி படித்திருப்பார்?”என்ற கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |