முத்துவுக்கு வில்லியாக மாறிய விஜயா.. சிறு வயதில் நேர்ந்த கொடூரத்திற்கான காரணம் இதுதானா?
சிறகடிக்க ஆசை சீரியலில் எந்த தாயும் செய்யக் கூடாத துரோகத்தை விஜயா முத்துவுக்கு செய்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியல் குடும்பத்தில் வாழ வந்திருக்கும் மருமகள்களும், மாமியாரின் பண ஆசையும் என கருப்பொருளுடன் நகர்த்தப்படுகிறது.
முத்து கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று வரும் நிலையில், புதிதாக சீதாவை திருமணம் செய்து மீனாவின் குடும்பத்திற்குள் வந்த அருண், குடும்பத்தை பிரிக்க பல வேலைபாடுகளை செய்து வருகிறார்.
அப்படி பல நாட்களாக காத்திருந்த அருண் கடந்த வாரங்களில் சீதாவிடம் பொய்யான கதையொன்றை கூறி சண்டை போட அனுப்பி வைக்கிறார். இந்த விடயத்தை முத்து கண்டுபிடித்து வீட்டிலுள்ளவர்களிடம் கூறி சமாதானம் செய்கிறார்.
துரோகம் செய்த விஜயா
இந்த நிலையில், முத்து விஜயா இவ்வளவு நாட்களாக வெறுத்து கொண்டிருந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. சிறுவயதில் ஒரு ஜோதிடர் தன்னுடைய உயிருக்கு முத்துவால் ஆபத்து இருக்கிறது என கூறியதால் அந்த பயத்தில் தன்னுடைய மகனை பிரிந்து வாழ்கிறார்.
பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த முத்துவை சொந்த வீட்டிற்கு அழைத்து வந்து, மனோஜுடம் பிரச்சினை செய்த காரணத்தினால் அவரை விஜயா ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார். இதனால் முத்து பயதில் அம்மா எனக் கூறும் பொழுது ஒரு ஏக்கம் வருகிறது.
மற்ற இரண்டு மகன்களையும் பாசத்துடன் வளர்த்த விஜயா ஏன் இப்படி செய்தார் என்பதை எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |