படையப்பா படத்தில் மீனாவா? ரஜினி மீது அதிக கோபத்தில் இருக்கும் நடிகை: ரஜினி பகிர்ந்த சுவாரஸ்ய பதிவு!
படையப்பா படத்தில் மீனா நடிக்க இருந்ததை மறுத்ததால் ரஜினி மீது இன்னும் மீனா கோபமாக இருப்பதாக ஒரு நிகழ்ச்சியில் ரஜினியே கூறியிருக்கிறார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் மீனா.
இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக மாறி ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து விட்டார்.
சினிமாவில் பிரபலமான இவர் 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறான நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் 28ஆம் திகதி நடிகை மீனாவின் கணவன் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.
கணவன் மறைவிற்கு பிறகு மீனா தற்போது சினிமா பக்கம் வரத் தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
படையப்பாவில் மீனா
மீனாவிற்காக கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு பேசிய ரஜினிகாந்த் படையப்பா படம் குறித்து சில சுவாஸ்ய கதையை கூறியிருக்கிறார்.
அதில் படையப்பா படத்தின் கதையை மீனாவிடம் கூறிய போது நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். ஆனால் மீனாவின் முகம் குழந்தை போல இருக்கும் அதனால் வசுந்தராவாக கதாபாத்திரத்தில் நடிக்க மீனாவை கேட்டேன். அதற்கு அவர் மிரட்டலான நீலாம்பரி கதாபாத்திரம் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். இதனால் நானும் இயக்குனரும் எடுத்து கூறினோம் அதனால் படையப்பா படத்தில் மீனாவால் நடிக்க முடியாமல் போனது.
இதனால் மீனா என் மீது இன்று வரைக்கும் கோபத்தில் தான் இருக்கிறார். என்று அந்த நிகழ்வில் 24 வருடம் கழித்து இந்த தகவல்களை ரஜினி பகிர்ந்திருக்கிறார்.