கணவரை இழந்த நிலையில் இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபலம்: அவரே வெளியிட்ட பகீர் தகவல்!
நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக வெளியான தகவல்களுக்கு அவரே திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன் என கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் மீனா.
இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர்.
இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக மாறி ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து விட்டார். சினிமாவில் பிரபலமான இவர் 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக அறிமுகமான நைனிகா.
இவ்வாறான நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் 28ஆம் திகதி நடிகை மீனாவின் கணவன் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.
இரண்டாவது திருமணம்
46 வயதில் தனது கணவனை இழந்த மீனா. இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வார் என பல வதந்திகள் கிளம்பிய நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு மீனாவும், கன்னட நடிகர் சுதீப்பும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.
அப்போது அவர்கள் இருவரும் இணைந்து 2 படங்களில் நடித்திருந்த நிலையில், இந்த வதந்தியை அறிந்த மீனா,
“தன்னை திருமணம் செய்ய வைக்க ஊடகவியலாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றனர் எனவும், தனது திருமணம் குறித்து ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் வருவது இது மூன்றாவது முறை.
ஆனால் இந்த கிசுகிசுவில் உண்மையில்லை என்றும், சுதீப் தனது நல்ல நண்பர்களில் ஒருவர் என்றும் நாங்கள் இரண்டு படங்களில் மட்டுமே இணைந்து நடித்துள்ளோம்.
தன் திருமணத்தை பத்திரிகையாளர்களிடமோ அல்லது யாரிடமோ தான் மறைக்க மாட்டேன் என்றும், தன் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்” என கூறியிருக்கிறார்.
You May Like This Video