மீண்டும் மீண்டுமா? ஒரு வழியாக சந்திரமுகியை நேரில் சந்தித்த வேட்டையன்- ஷாக்கில் ரசிகர்கள்!
பிரபல நடிகர் ரஜினி - கங்கானா ஆகிய இருவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சீனா வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது ரஜினிக்கு தான்.
இதனை தொடர்ந்து இன்றும் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினி தன்னுடைய 170 ஆவது படத்தி கமிட்டாகியுள்ளார்.
வயதானாலும் திறமைக்கு ஒரு முடிவில்லை என்பதற்கு ரஜினி, கமல் ஆகிய இருவரும் சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறார்கள்.
வைரல் புகைப்படம்
இந்த நிலையில் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிற்கு நேரில் சென்று ரஜினி சந்தித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன்,ராணா,பகத் பாசில்,மானுஜு வாரியார், ரித்திகா சிங் என பலரும் நடிக்க உள்ளனர்,
சந்திரமுகி 1 மற்றும் 11 பாகங்களை வைத்து இருவரையும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ஒரு வழியாக வேட்டையன் காதலித்த சந்திரமுகியை நேரில் பார்த்து விட்டார் என கலாய்க்கும் வகையில் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |