சினிமாவிலிருந்து விலகும் சூப்பர் ஸ்டார்! இதுவே கடைசிப்படம்
சூப்பர் ஸ்டார் என்ற பெயரைக் கேட்டாலே நம் அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது ரஜினிகாந்த் தான்.
இவரது பேச்சுக்கும் ஸ்டைலுக்கும் வயது சென்றவர்கள் முதல் சிறுவர்கள் வரை ரசிகர் கூட்டம் காணப்படுகிறது. தற்போது இவர் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகின்றது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், ரஜினிகாந்த் அவர்கள் லோகேஷ் கனகராஜை அழைத்து, தனக்காக ஒரு ஸ்க்ரிப்ட் தயாரிக்க சொன்னதாகவும் அதுவே அவரது கடைசித் திரைப்படமாக இருக்கும் என்றும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன.
image - dnext
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் இதை உறுதி செய்துள்ளார். அவர் இயக்குநர் லோகேஷ் பற்றி பேசுகையில், “அவன் இந்திய அளவில் பெரிதாக வளர்ந்துகொண்டிருக்கிறான்.
அடுத்து ரஜினிகாந்தை வைத்து படம் பண்ணப் போறான். அது பெருமையான விடயம். அது ரஜினியோட கடைசிப்படம் என்று அனைவரும் கூறுகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.